நாம் தமிழர் கட்சி – திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியத்தைச் சேர்ந்த களப்போராளி அன்புத்தம்பி சரவணன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா மு.மும்மூர்த்தி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பி சரவணன் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா மு.மும்மூர்த்தி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




