தமிழ்த்தேசிய இனத்திற்கான மகத்தான அரசியலைக் கட்டியெழுப்பி வரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் படையில் தன்னை இணைத்துக் கொண்டு, அயராது பணியாற்றி வந்த களச்செயற்பாட்டாளன்!
தமிழ்த்தேசியம் எனும் விடுதலைக்கருத்தியலை சுமந்து நிற்கும் ஊடகமான வள்ளுவம் வலைக்காட்சியில் பணியாற்றிய அறம் சார்ந்த ஊடகவியலாளன்!
தத்துவார்த்தத் தெளிவும், அரசியல் புரிதலும் கொண்டு நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பாசறையில் சிறப்பாகச் செயலாற்றி வந்த இளையோன்!
அன்பு இளவல் இரா.அன்பழகன் அவர்களது திடீர் மறைவுச்செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி இரா.அன்பழகன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




