முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மீண்டும் இன்று ( 18.03.2025 ) மூன்று இராமேஸ்வரம் மீனவர்கள்…

0

மீண்டும் இன்று ( 18.03.2025 ) மூன்று இராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது..!

வெறும் கண்டனங்களால் காயங்கள் ஆறப்போவதுமில்லை..!
வெற்று கடிதங்களால் கைது செய்யப்படுவது நிற்கப்போவதுமில்லை..!

கடலில் இறங்கும் நம் மீனவச்சொந்தங்களைக் காக்க..!
களத்தில் இறங்க வாருங்கள்… தாய்த்தமிழ் உறவுகளே..!

இலங்கைச் சிங்கள இனவெறிக் கடற்படையால் தமிழ் மீனவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்து சிறைப்படுத்தப்படுவதைத் தடுக்காமலும்,

தமிழர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவை மீட்டு நிலைத்த தீர்வினைக் காணாமலும்

தமிழர்களைத் தொடர்ந்து வஞ்சித்து வரும்,

இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசையும்,
தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசையும் கண்டித்து…

22.03.2025 சனிக்கிழமை அன்று இராமேசுவரம் – தங்கச்சிமடம், வலசை பேருந்து நிறுத்தம் அருகில்

நாம் தமிழர் கட்சி – மீனவர் பாசறை முன்னெடுக்கும்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில்
பெருந்திரளாகப் பங்கேற்போம்!

மீனவச்சொந்தங்களைக் காக்க
மானத்தமிழரெல்லாம் மறவாமல் கூடுவோம்..!

நாம் தமிழர்!

Exit mobile version