நாம் தமிழர் கட்சி – துறைமுகம் மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி ஆபேல் அவர்களின் தாயார் அம்மா ப.உத்திரமேரி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் அன்புத்தம்பி ஆபேல் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா ப.உத்திரமேரி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




