நாம் தமிழர் கட்சி – சோளிங்கர் கட்சி மாவட்ட உழவர் பாசறைப் பொறுப்பாளர் அன்புத்தம்பி தமிழ்ச்செல்வன் அவர்களின் அன்புமகன் புகழ்ஆதிரன் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
உயிரினும் மேலாக நேசித்த அன்புமகனை சிறு வயதிலேயே பறிகொடுப்பது என்பது எதன் பொருட்டும் ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.
பாசமிகு மகனை இழந்து தவிக்கும் அன்புத்தம்பி தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.
அன்புமகன் புகழ்ஆதிரன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




