இங்கிலாந்து நாட்டிலிருந்து ஒலிப்பரப்பாகும், பிபிசி தமிழோசை வானொலியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவிப்பாளராகப் பணியாற்றி, தம்முடைய காந்தக்குரலால் உலகத்தமிழர்களின் உள்ளங்கவர்ந்த அக்கா ஆனந்தி சூர்யப்பிரகாசம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
அக்கா ஆனந்தி அவர்கள்
தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களை இரண்டுமுறை நேர்காணல் செய்யும் வாய்ப்பினை பெற்ற பெருமைக்குரியவர். தம் இனிய குரலால் தமிழ்த்தொண்டாற்றிய அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
அக்கா ஆனந்தி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழ்ச்சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
அக்கா ஆனந்தி சூர்யப்பிரகாசம் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!




