நாம் தமிழர் கட்சி – திருவாடானை சட்டமன்றத் தொகுதி, தொண்டியைச் சேர்ந்த மாவட்ட வழக்கறிஞர் பாசறையின் பொறுப்பாளர் அன்புத் தங்கை ஆதித்யா
அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடி வரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையான நாம் தமிழர் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு வழக்கறிஞர் பாசறைப் பொறுப்பாளராகக் களப்பணியாற்றி வந்த தங்கை ஆதித்யா அவர்களை இளம் வயதிலேயே நம்மைவிட்டுப் பிரிந்திருப்பது பெருந்துயரத்தைத் தருகிறது.
அன்புத் தங்கையை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தங்கை ஆதித்யா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




