நாம் தமிழர் கட்சி – இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி தியாக திலீபன் தானி ஓட்டுநர் சங்கத்தின் துணைத் தலைவர் அன்புத்தம்பி உதயகுமார் அவர்களின் அம்மா பூங்கோதை அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
அம்மா பூங்கோதை அவர்களை இழந்து பெருந்துயரில் வாடும் உதயகுமார், அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா பூங்கோதை அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



