பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள்!
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் அழிக்கவே முடியாத கறை படிந்த நாள்!
இந்த நாட்டில் வாழும் இசுலாமியப் பெருமக்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்ட நாள்!
இந்திய அரசியலமைப்பின் மதச்சார்ப்பற்ற முகப்புப் பக்கம் கிழித்தெறியப்பட்ட நாள்!
உலக அரங்கில் பெருத்த அவமானத்தைச் சுமந்து இந்தியப் பெருநாடு தலைகுனிந்த நாள்!
இந்த நாட்டின் ஒருமைப்பாடு சிதைக்கப்பட்டு ஒற்றுமை சீர்குலைந்த நாள்!
வேற்றுமையில் ஒற்றுமை வேரோடு பிடுங்கி எறியப்பட்டு, இந்தியாவின் பன்முகத்தைப் பலிகொடுக்கப்பட்ட நாள்!
அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினால் மசூதி இருந்த இடத்தில் கோயில் கட்டலாம்! ஆனால், உடைக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களின் மனங்களை, இந்த நாட்டின் மீதான அவர்களின் நம்பிக்கையை ஒருபோதும் மீண்டும் கட்டி எழுப்ப முடியாது..!
என்றைக்கு இந்த நாட்டின் நீதிமன்றங்களில் தீர்ப்புக்கு பதிலாக நீதி வழங்கப்படுகிறதோ அன்றைக்குதான் இந்த நாடு உண்மையிலேயே மக்களாட்சி நாடாக இருக்கும்!
இந்திய நாட்டின் மதச்சார்பின்மை, அயோத்தி மண்ணில் நிரந்தரமாய்ப் புதைக்கப்பட்ட கருப்புநாள் இன்று!




