முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மண்ணையும், மக்களையும் நேசித்து, தாய் மடியென இயற்கையன்னையைப் போற்றிக் கொண்டாடிய…

0

மண்ணையும், மக்களையும் நேசித்து, தாய் மடியென இயற்கையன்னையைப் போற்றிக் கொண்டாடிய பெருந்தமிழர்!

அனைத்து உயிர்களையும் அன்புகொண்டு நேசித்து நின்ற இயற்கைத்தாயின் பெருமகன்!

உழவாண்மையின் தேவையையும், நஞ்சில்லா உணவையும் வலியுறுத்திய பெருந்தகை!

'உழவு இல்லையேல், உணவு இல்லை!
உணவு இல்லையேல், உயிர்கள் இல்லை!
உயிர்கள் இல்லையேல், உலகு இல்லை!' என்று பாருக்குப் உணர்த்திய பேரறிஞர்!

"விதைத்துக்கொண்டே இரு! முளைத்தால் மரம்; இல்லையேல், மண்ணுக்கு உரம்!" என்று இளந்தலைமுறைக்குக் கற்பித்த பேராசான்!

மண்ணைக் காக்கவும், பாரம்பரிய விதைகளை மீட்கவும் வாழ்நாள் முழுமைக்கும் போராடிய மண்ணுரிமைப்போராளி!

வேப்பமரத்தின் காப்புரிமையைப் போராடி வென்று தந்த தமிழ்ப்பெருங்குடியோன்!

'விதைகளே பேராயுதம்’ என்று வீரமுழக்கமிட்ட தமிழினத்தின் பேராசான்!

இளந்தலைமுறைப் பிள்ளைகளை இயற்கை வேளாண்மையை நோக்கியும், தாய் மண்ணையும் நோக்கியும் திரும்பச் செய்த எங்களின் முன்னத்திஏர்!

இயற்கையின் மொழியறிந்து வாழ்வியலைப் பேணுவதற்கு தற்காலத் தமிழ்ப்பிள்ளைகளுக்குப் பாடமாய் இருக்கிற எங்களின் வழிகாட்டி!

எங்களின் பெரிய தகப்பன் இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் அவர்களைப் போற்றி, வணங்குகிறோம்!

Exit mobile version