நாம் தமிழர் கட்சி- செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் அன்புத்தம்பி சி.ர.ராஜேஷ் அவர்களின் பாட்டனார் மு.நடராஜன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஐயாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பி சி.ர.ராஜேஷ் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா மு.நடராஜன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




