நாம் தமிழர் கட்சி – ஆவடி தொகுதிப் பொறுப்பாளர் அன்புத்தம்பி ஓவியர் ச.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தாயார் அம்மா ச.கிருஷ்ணவேணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் துயரமடைந்தேன்.
அன்னையை இழந்து வாடும் தம்பிக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா ச.கிருஷ்ணவேணி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




