நாம் தமிழர் கட்சி – திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதி, காரம்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த தம்பி ஐயப்பன் அவர்களின் தந்தை அண்ணாமலை அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பி ஐயப்பன் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா அண்ணாமலை அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




