நாம் தமிழர் கட்சி – ஆவடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு நகரப் பொறுப்பாளர் அன்புத்தம்பி விசயன் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
மண்ணுக்கும் மக்களுக்குமான புரட்சிகர அரசியல் பெரும்படையான, நாம் தமிழர் கட்சியில் இணைந்து, களப்பணியாற்றிவந்த தம்பி விசயன் அவர்களின் மறைவு பெரும் துயரத்தைத் தருகிறது.
பாசமிகு தம்பியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி விசயன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




