முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழின உணர்வாளரும், தமிழர் பரிந்துரை வணிகம் அமைப்பின் முன்னணிச் செயல்பாட்டாளருமான…

0

தமிழின உணர்வாளரும், தமிழர் பரிந்துரை வணிகம் அமைப்பின் முன்னணிச் செயல்பாட்டாளருமான ஐயா வீ. சேனாபதி அவர்களின் மறைவுச்செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

தமிழீழத் தாயக விடுதலை மீதும், தமிழ்த்தேசிய அரசியல் மீதும் பெரும் ஈடுபாடும், அளப்பரிய பற்றும் கொண்டிருந்த ஐயா சேனாபதியின் இழப்பு ஈடுஇணையற்றது. அவர் மரணித்தாலும் அவர் கொண்டிருந்த கனவும், இலட்சியத் தாகமும் ஒருநாளும் மறைந்துபோகாது. அதனைத் தூக்கிச் சுமந்து, இலட்சியக் கனவை ஈடேற்ற இந்நாளில் உறுதியேற்போம்.

ஐயாவுக்கு என் கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

Exit mobile version