முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – சேலம் மாவட்டம், ஓமலூர் தொகுதி…

0

நாம் தமிழர் கட்சி – சேலம் மாவட்டம், ஓமலூர் தொகுதி மகளிர் பாசறைப் பொறுப்பாளர் அன்புத்தங்கை தமிழழகி அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

பெண்கள் பங்கேற்காத எந்தப் போராட்டமும், எந்தப் புரட்சியும், எந்த இயக்கமும் வென்றதாக வரலாற்றில் செய்தி இல்லை.

'பெண் விடுதலை இல்லையேல்; மண் விடுதலை இல்லை!' என்ற நம் தமிழ்த்தேசியத்தலைவரின் கூற்றுக்கிணங்க 'ஆணும், பெண்ணும் சமம்!' என்ற தத்துவநிலைப்பாட்டில், 'பெண்களைப் போற்றுவோம்! பெருமைக்குரிய நாடாக மாற்றுவோம்! என்ற முழக்கத்தை ஏந்தி, புரட்சிகர அரசியலை முன்னெடுத்துவரும் நாம் தமிழர் கட்சியில் இணைந்து, மகளிர் பாசறைப் பொறுப்பாளராகச் சிறப்பாகச் செயற்பட்டுவந்த தங்கை தமிழழகி அவர்களது மறைவு மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.

தங்கையை இழந்து வாடும் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அன்புத்தங்கை தமிழழகி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version