நாம் தமிழர் கட்சி – புதுச்சேரி மாநிலத் தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் அன்புத்தம்பி த.இரமேசு அவர்களின் வாழ்விணையர் இர.சுந்தரி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
உற்ற துணையை இழந்து வாடும் தம்பி இரமேஷ் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
சகோதரி இர.சுந்தரி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




