முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகப்பா நகரில் வசித்து வந்த அன்புத்தம்பி…

0

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகப்பா நகரில் வசித்து வந்த அன்புத்தம்பி பிரேம்குமார் அவரது மனைவி மஞ்சுளா மற்றும் அன்பு மகன்கள் நவிலன், மிதிலன் ஆகியோர் வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி படுகாயமடைந்து, தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சகோதரி மஞ்சுளா மற்றும் அன்புமகன்கள் இருவரும் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

எதிர்பாராத தீ விபத்தில் மனைவி மற்றும் மகன்களை இழந்துவாடும் தம்பி பிரேம்குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

மின்கசிவே தீ விபத்து ஏற்பட காரணம் என கூறப்பட்டிருந்த நிலையில் மின்வாரியம் அதனை மறுத்துள்ளது. ஆகவே, தமிழ்நாடு காவல்துறை தீர விசாரணை நடத்தி விபத்துக்கான உண்மையான காரணத்தை வெளிக்கொணர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

தங்கை மஞ்சுளா மற்றும் அன்புமகன்கள் நவிலன், மிதிலன் ஆகியோருக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version