முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அருவிபோல் கொட்டும் அருந்தமிழ் பேச்சால் அறிவுக்கு விருந்தினைப் படைக்கும் ஆற்றல்மிகு…

0

அருவிபோல் கொட்டும் அருந்தமிழ் பேச்சால் அறிவுக்கு விருந்தினைப் படைக்கும் ஆற்றல்மிகு சொற்பொழிவாளர்!

இதழியல் மொழிநடையை உருவாக்கி தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட தந்தை!

அரசியல், இலக்கியம், சமயம் என பல்துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் இயற்றி அன்னைத் தமிழுக்கு அணி சேர்த்த தமிழறிஞர்!

இந்தியத் துணைக்கண்டத்தின் முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கத்தைத் தோற்றுவித்து, தொழிலாளர் உரிமைபெறத் தோள்கொடுத்துத் துணைநின்ற புரட்சிப்போராளி!

செந்தமிழும், சிவநெறியும் போற்றி வளர்த்த சைவப் பேரறிஞராகத் திகழ்ந்தபோதும் சைவம், வைணவம், சமணம், பௌத்தம், இசுலாம் உள்ளிட்ட பல மதக் கோட்பாடுகளையும் கற்றுத்தேர்ந்த சமயப் பேதமற்ற சமூகச் சிந்தனையாளர்!

அரசியல் அறிஞர், ஆகச்சிறந்த ஆசிரியர், படைப்புத் திறன்மிக்கப் பத்திரிகையாளர், தனித்தமிழியக்க முன்னோடி, பெண்ணுரிமைப் போராளி, சாதிய தீண்டாமையை எதிர்த்துப் போராடிய தீரர், சமரச சன்மார்க்க அருளாளர், காந்தியவாதி, பொதுவுடைமை சிற்பி என்ற பன்முகச் சிறப்பிற்குரிய பெருந்தகையாளர்!

தமிழாகவே வாழ்ந்த, தமிழர் நலத்திற்காகவே வாழ்ந்த, தமிழ்த் திருநாட்டின் வளர்ச்சிக்காகவும், இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காகவும் தன் வாழ்வெலாம் அரும்பாடுபட்ட நம்முடைய ஐயா தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்களின் நினைவைப்போற்றுவோம்!

நாம் தமிழர்!

Exit mobile version