முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அன்னைத் தமிழ்நிலத்தைக் காக்க ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நெற்கட்டான் செவ்வலில்…

1

அன்னைத் தமிழ்நிலத்தைக் காக்க ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நெற்கட்டான் செவ்வலில் போரிட்ட முதல் விடுதலைப் போராட்டவீரர் வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவனின் படையணியில் வீரமும், தீரமும் மிக்க படைத்தளபதிகளுள் ஒருவராகத் திகழ்ந்தவர்.

எதிரிகளின் படைமுகாமிற்குள் ஒற்றை ஆளாகச் சென்று, அனைவரையும் அழித்து, வெற்றிவாகைச் சூடுவதையே வாடிக்கையாகக் கொண்டிருந்ததால் 'ஒண்டிவீரன்' என மக்களால் போற்றப்பட்டவர்.

பல போர்களில் வென்று வரலாற்றில் நீங்கா இடம் பிடித்து, போர்க்களத்திலேயே வீரமரணத்தைத் தழுவிக்கொண்ட மாவீரர்!

விடுதலைப் போராட்ட மாவீரர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!

நாம் தமிழர்!

Exit mobile version