நாம் தமிழர் கட்சி – திருப்பத்தூர் ( நடுவண் ) சட்டமன்றத் தொகுதி, செயலாளர் அன்புத்தம்பி சா.வின்சென்ட் ஆபிரகாம் அவர்களின் தாயார் அம்மா ஸ்டெல்லா ஜெயபாக்கியம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
அம்மா ஸ்டெல்லா ஜெயபாக்கியம் அவர்களை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பி சா.வின்சென்ட் ஆபிரகாம் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா ஸ்டெல்லா ஜெயபாக்கியம் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




