முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உன்னத இசை…

0

பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உன்னத இசை அமைத்ததற்காக, இந்திய ஒன்றிய அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதினை பேரன்பிற்குரிய சகோதரர் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் வென்றுள்ள செய்தியறிந்து மிகுந்த மனமகிழ்வும், பெருமிதமும் அடைந்தேன்!

ஏ.ஆர்.ரகுமானின் இசை மகுடத்தில்,
இந்திய அளவிலான விருதெனும் வைரம்
7வது முறையாகப் பதிக்கப்பட்டுள்ளது
என்ற வரலாற்றுத் தனிச்சிறப்பு ஒவ்வொரு தமிழரையும் பெருமை கொள்ளச்செய்கிறது.

இசையால் நீங்களும்,
உங்களால் இனமும்
என்றென்றும் பெரும்புகழ் பெற்றிட
என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!

@arrahman

Exit mobile version