முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

உயர்கல்வி சார்ந்த மாணவர் நலன், ஆசிரியர் நலன் மற்றும் சமூக…

0

உயர்கல்வி சார்ந்த மாணவர் நலன், ஆசிரியர் நலன் மற்றும் சமூக நலனுக்காக 50 ஆண்டுகளுக்கும்
மேலாகத் தொடர்ந்து போராடி வரும் தமிழ்நாடு முழுவதும் உள்ள

அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றிடும் ஆசிரியர்களின் சங்கங்களான ஏயூடி(AUT) மற்றும் மூட்டா(MUTA) ஆகிய இயக்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் இன்று 14-08-2024 மதுரையில் என்னை நேரில் சந்தித்து நாம் தமிழர் கட்சி மாநிலக் கட்சியாக அங்கிகாரம் பெற்றுள்ளமைக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

மேலும், உயர்கல்விப் பணியாற்றும் அரசு நிதி உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் மூன்று ஆண்டுகளாக உரிய ஊதியம் இன்றி
பாதிக்கப்பட்டுள்ள சூழலை உடனடியாகச் சீர்செய்ய தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துமாறு கோரிக்கை வைத்தனர்.

விதைநெல்லாகப் போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய ஆசிரியர்களின் உரிமைகளுக்காகவும், நல்வாழ்விற்காகவும் நாம் தமிழர் கட்சி எப்போதும் துணை நிற்கும் என்று உறுதியளித்தேன்.

Exit mobile version