புதுக்கோட்டை மாவட்டம், கண்ணுக்குடிபட்டியைச் சேர்ந்த மெய்யியல் அன்பர்கள் 25 பேர் நடைபயணமாக சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் சென்ற நிலையில், தஞ்சை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த வாகனம் மோதியதில் முத்துசாமி, ராணி, மோகனாம்பாள், மீனா மற்றும் தனலட்சுமி ஆகிய 5 பேர் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
தமிழ்நாடு காவல்துறை, விபத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து விபத்தை ஏற்படுத்தியவர்கள் மீது விரைந்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாடு அரசு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 இலட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @mkstalin




