முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…

0

நாம் தமிழர் கட்சி – வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த குருதிக்கொடைப் பாசறை மாவட்டச் செயலாளர் அன்புத்தங்கை பா.சாந்தி அவர்களின் தாயார் அம்மா சரோகாசி அவர்கள் மறைவுற்ற துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.

பெற்றெடுத்து, போற்றி வளர்த்து ஆளாக்கிய பேரன்புமிக்க அன்னையின் இழப்பு எதன் பொருட்டும் ஈடுசெய்ய இயலாதது. தாயை இழந்து வாடும் தங்கைக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

அம்மா சரோகாசி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version