முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்மொழி வாழ்க! தமிழ்மொழி வாழ்க! தமிழ்மொழி வாழ்க – வென்…

0

தமிழ்மொழி வாழ்க! தமிழ்மொழி வாழ்க!
தமிழ்மொழி வாழ்க – வென் றுரைப்போம்! – அதால்
தமிழினம் மலர்க – வென் றழைப்போம்!

தமிழ்இனம் வாழ்க! தமிழ்இனம் வாழ்க!
தமிழ்இனம் வாழ்க – வென் றுரைப்போம்! – அதில்
தமிழினம் தழைக்க – வென் றுழைப்போம்!

எப்படியேனும் இத் தமிழகத்தை
முப்படி உயர்த் திடல் வேண்டும்- என்
மூச்சதற் குதவிடல் வேண்டும்!

என்று தன் வாழ்நாளின் இறுதி மூச்சு உள்ளவரை தமிழுக்கும், தமிழருக்குமாக உழைத்த பெருந்தகை!

தனித்தமிழ்ப் பாவலர்!

தமிழ்த்தேசிய அரசியலின் முன்னோடி!

நமது ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!

நாம் தமிழர்!

Exit mobile version