முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜல்லிபட்டி…

0

நாம் தமிழர் கட்சி – மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜல்லிபட்டி ஊராட்சியைச் சேர்ந்த குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர் அன்புத்தம்பி சரவணன் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் இணைந்து, குருதிக்கொடைப் பாசறையின் மூலம் மக்களின் உயிர்காக்கும் உன்னதப் பணியாற்றிவந்த ஆகச்சிறந்த களப்போராளியை இழந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.

தம்பி சரவணன் அவர்களை இழந்து வாடும் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அன்புத்தம்பி சரவணன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version