நாம் தமிழர் கட்சி – சென்னை மாவட்டம், திருவொற்றியூர் தொகுதி வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர் அன்புத்தம்பி வே.சதீஷ்குமார் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா ப.வேலுபிச்சை அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து தாங்கொணாத் துயரமடைந்தேன்.
அப்பாவை இழந்து வாடும் தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா ப.வேலுபிச்சை அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




