காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த சகோதரர் சௌந்தரராஜன் அவர்களின் அன்புமகன் கார்த்திகேயன், துபாயில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான 21வது ஆசிய தடகளப் போட்டிகளில் 4*100 தொடர் ஓட்டப்பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்று வெண்கலப்பதக்கம் வென்ற செய்தியறிந்து மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்தேன்.
இளம் வயதில் பதக்கம் வென்று, பிறந்த தமிழ் இனத்திற்கும், பேணி வளர்த்த தாய்- தந்தையருக்கும் பெருமை சேர்த்துள்ள அன்புமகனின் சாதனை மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.
அன்புமகன் கார்த்திகேயன் அவர்கள் மேலும் பல பன்னாட்டுப் போட்டிகளில் பங்குபெற்று சாதனைகள் புரிய என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!



