ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மறை மாவட்ட ஆயர் பெருமதிப்பிற்குரிய ஐயா தேவதாஸ் அம்புரோஸ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனத்துயரமடைந்தேன்.
மக்களுக்கு செய்யும் சேவையே ஆண்டவருக்கு விருப்பமான ஆராதனை என்ற மறைமொழிக்கேற்ப சாதி, மதப் பேதம் பாராது மக்கள் தொண்டாற்றிய ஐயா தேவதாஸ் அம்புரோஸ் அவர்களின் மறைவு ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மறை மாவட்ட மக்களுக்கு ஏற்பட்டப் பேரிழப்பாகும்.
ஐயா அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், கிறித்துவ திருச்சபை நண்பர்களுக்கும், மக்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.
போற்றுதலுக்குரிய ஐயா தேவதாஸ் அம்புரோஸ் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!




