முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

துறையூரில் ஓங்காரக்குடில் நிறுவி அருட்தொண்டாற்றிய பெருமதிப்பிற்குரிய ஐயா ஆறுமுக அரங்கமகா…

0

துறையூரில் ஓங்காரக்குடில் நிறுவி அருட்தொண்டாற்றிய பெருமதிப்பிற்குரிய ஐயா ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனத்துயரம் அடைந்தேன்.

வள்ளலார் வழிநின்று அகத்தியர் சன்மார்க்க சங்கம் தோற்றுவித்து ‘ஆதரவற்ற மக்களின் பசிப்பிணி தீர்க்கும் அரும்பணியே, ஆண்டவனுக்குச் செய்யும் திருப்பணி என்ற’ உயர்நெறியுடன் வாழ்ந்த உயிர்மநேயர் ஐயா ஆறுமுக தேசிக சுவாமிகளின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

ஐயாவை இழந்து வாடும் அன்பர்களுக்கும், பொதுமக்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

அருட்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்!

Exit mobile version