சிவகங்கை சட்டமன்றத் தொகுதி தகவல் தொழிற்நுட்ப பாசறைச் செயலாளர் தம்பி அமரன் கார்த்தி அவர்களின் பாசத்திற்குரிய தாயார் சு.ராஜம்மாள் நாச்சியார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
பெற்றெடுத்து பேணி வளர்த்த தாயை இழந்து வாடும் தம்பி அமரன் கார்த்தி அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.
அம்மா ராஜம்மாள் நாச்சியார் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




