தஞ்சை நாடாளுமன்றச் செயலாளர், என் அன்பிற்கினிய தம்பி மு.கந்தசாமி அவர்களின் பாசத்திற்குரிய தாயார் வேம்பு என்கிற நாகம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
பெற்றெடுத்து பேணி வளர்த்த தாயை இழந்து வாடும் தம்பி கந்தசாமிக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.
அம்மா நாகம்மாள் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




