பழம்பெரும் தமிழறிஞரும், சொற்பொழிவாளருமான நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்களின் மூத்த மகள் அம்மா இராஜலட்சுமி அனுமந்தன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
அம்மா இராஜலட்சுமி அனுமந்தன் அவர்களை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.
அம்மா இராஜலட்சுமி அனுமந்தன் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்!




