தமிழ்ச்சமூகத்தின் தாய்க்குடியான குறவர் சமூக மக்களின் உயர்வுக்கும், உரிமைக்குமாக அயராது போராடி வரும், வனவேங்கைகள் கட்சித் தலைவர் அன்புத்தம்பி பொ.மு.இரணியன் அவர்களின் தந்தையார், பெருமதிப்பிற்குரிய ஐயா முத்தையா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன்.
தமிழ்த்தேசிய இன விடுதலை அரசியல் களத்தில் என் தோளோடு தோளாகத் துணைநிற்கும் தம்பி இரணியன் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இப்பேரிழப்பு எதன் பொருட்டும் ஈடுசெய்யவியலாதது.
பேரன்புகொண்டு நேசித்த தந்தையை இழந்து வாடும் தம்பி இரணியன் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், வனவேங்கைகள் கட்சி உறவுகளுக்கும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா முத்தையா அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!




