முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

கோயம்புத்தூர் மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட உப்பிலிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த, நாம்…

0

கோயம்புத்தூர் மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட உப்பிலிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த, நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தங்கை இர.நர்மதா அவர்களின் தந்தையார், ஓய்வுபெற்ற வான்படை அதிகாரி பெருமதிப்பிற்குரிய ஐயா மா.இரத்தினசாமி அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

பேரன்புகொண்டு நேசித்த தந்தையை இழந்து பெருந்துயருற்றுள்ள தங்கை நர்மதா அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா மா.இரத்தினசாமி அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

Exit mobile version