மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதியைச் சேர்ந்த வாடிப்பட்டி ஒன்றியத் தலைவர் பா.தமிழ்முருகன் அவர்களின் தாயார், அம்மா பா.பஞ்சவர்ணம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
பெற்றெடுத்து போற்றி வளர்த்த பாசமிகு அன்னையை இழந்து வாடும் தம்பி தமிழ்முருகன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா பஞ்சவர்ணம் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!




