முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இந்திய பிரதமர் மோடி அவர்கள் மகளிர் நாளினை முன்னிட்டு எரிகாற்று…

0

இந்திய பிரதமர் மோடி அவர்கள் மகளிர் நாளினை முன்னிட்டு எரிகாற்று உருளையின் விலையை ரூ.100 அளவிற்கு குறைத்திருப்பது வேடிக்கையாக உள்ளது.

எரிகாற்று உருளை என்பது மகளிருக்கு மட்டுமானதா? வீட்டுக்கானதில்லையா? குடும்பத்திற்கானதில்லையா?

பாஜக ஆட்சிக்கு வந்த பத்தாண்டுகளில் இப்போதுதான் முதல்முறையாக மகளிர் தினம் வருகிறதா? கடந்த 5 ஆண்டுகளில் 58 முறை எரிகாற்று உருளையின் விலையை 45% உயர்த்திவிட்டு, இந்த ஆண்டு மட்டும் குறைப்பதற்கு காரணம் மகளிர் நாள் வருவதனாலா?

இந்த ஆண்டு தேர்தல் நாள் வருவதனாலா?

Exit mobile version