நாம் தமிழர் கட்சியின் கொளத்தூர் சட்டமன்றப் பகுதி செயலாளர் அன்புத் தம்பி கணேசன் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
தம்பி கணேசன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி கணேசன் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!




