நாம் தமிழர் கட்சி – தொழிற்சங்க பேரவையின் தானி பிரிவு மாநிலச் இணைச் செயலாளர் தம்பி ஆல்பர்ட் தனராஜ் அவர்களின் அண்ணன் பொன். டேவிட் அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன்.
அண்ணனை இழந்து வாடும் அன்புத்தம்பி ஆல்பர்ட் தனராஜ் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்பு சகோதரர் பொன்.டேவிட் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!




