முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

முன்னாள் சென்னை மாநகரத் தந்தையும், சைதை தொகுதியின் முன்னாள் சட்டமன்ற…

1

முன்னாள் சென்னை மாநகரத் தந்தையும், சைதை தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எனது பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய ஐயா சைதை துரைசாமி அவர்களின் அன்புமகன் வெற்றி அவர்கள் இமாச்சல பிரதேசத்தில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி, உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

எல்லோரிடமும் அன்புடனும், மிகுந்த மரியாதையுடனும் பேசிப் பழகும் பெருங்குணமும், எளிமை பண்பும் ஒருங்கே கொண்ட தம்பி வெற்றியின் மறைவு பெருந்துயரத்தை அளிக்கிறது.

மனிதநேய அறக்கட்டளை மூலம் அரசு மற்றும் வங்கிப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கும், குடிமைப்பணித் தேர்வுகளுக்கும் கட்டணமில்லா பயிற்சியளித்து, பல்லாயிரக்கணக்கான ஏழை-எளிய வீட்டுப் பிள்ளைகள் வாழ்வில் ஒளியேற்றி வைத்த பெருந்தகை ஐயா சைதை துரைசாமி அவர்களுக்கு நிகழ்ந்துள்ள இப்பேரிழப்பு மிகுந்த மனவலியைத் தருகிறது.

உயிருக்குயிராக நேசித்து வளர்த்த அன்புமகனை இழந்து தவிக்கும் ஐயா துரைசாமி அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

அன்புத்தம்பி வெற்றி துரைசாமி அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

Exit mobile version