முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

#நூல்_பரிந்துரை 06 தக்கார் ம.சோ.விக்டர் அவர்களின் தமிழர் வரலாற்று ஆய்வு…

0

#நூல்_பரிந்துரை 06

தக்கார் ம.சோ.விக்டர் அவர்களின்

தமிழர் வரலாற்று ஆய்வு நூல்கள்!

நமது இனத்தின் விடுதலை என்பது தமிழர் நிலத்தில் நாம் பெற இருக்கின்ற அரசியல் அதிகாரத்தை உள்ளடக்கியது என்பதை நீங்கள் அறிவீர்கள். அரசியல் விடுதலை என்பது பெரும்பகுதி நாம் பெறவேண்டிய வரலாற்று விடுதலையில் இருக்கிறது. அண்மை காலங்களில் தமிழர்களின் வரலாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டும், இருக்கின்ற அடையாளங்கள் கண்முன்னே சிதைக்கப்பட்டும் வருவதை நாம் அறிகிறோம். நாம் தெளிவுபெற வேண்டிய வரலாற்றுத் தரவுகள் பெரும்பாலும் ஆய்வுகளாகவும், மொழியின் தரவுகளை உள்ளடக்கிய இலக்கியச் சொற்களைக் கொண்டும் இன்றைய காலக்கட்டத்தில் நிருவப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழர் வரலாற்றில் மிக நெடிய ஆய்வுகளை நிகழ்த்தி கடந்த 50 ஆண்டுகளாக களப்பணியில் தொண்டாற்றி வரும் வரலாற்றுப் பேராய்வாளர், பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய ஐயா ம.சோ.விக்டர் அவர்கள். அவருடைய அயராத உழைப்பினால் தமிழர் வரலாற்றின் பதிவுகளாக இதுவரை 150க்கும் மேற்பட்ட நூல்கள் யாத்திசை பதிப்பகம் வாயிலாக வெளிவந்துள்ளன. இன்னும் சில நாட்களில் 30 நூல்கள் வெளிவர இருக்கின்றன.

தன்னுடைய ஆய்வில் அசைக்க முடியாத் தரவுகளோடு ஆய்வு விபரங்களைப் பதிவு செய்யும் ஆற்றல் படைத்தவர் ஐயா ம.சோ.விக்டர் அவர்கள். தமிழர் வரலாற்றில் தெளிவு பெறவேண்டிய ஒவ்வொரு தமிழரும் தேடித் தேடி வாசிக்க வேண்டிய நூல்கள் தக்கார் ம.சோ. விக்டர் அவர்களின் நூல்கள்.

தமிழர் வரலாற்று ஆய்வில் தனிப்பெரும் பங்களிப்பை நிகழ்த்தி இன்றும் தன்னுடைய பணியைச் செவ்வனே செய்து கொண்டு இருக்கும் ஐயா ம.சோ. விக்டர் அவர்களின் அனைத்து நூல்களையும் சென்னைபுத்தகக் கண்காட்சியில் பெற்று வரலாற்று தெளிவுபெற வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version