முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

#நூல்_பரிந்துரை 03 #மரபுவழி_வாழ்வியல்_நூல்கள் தமிழர் இழந்துவிட்ட தொன்மம், தமிழர் வழிதொடரவேண்டிய…

0

#நூல்_பரிந்துரை 03

#மரபுவழி_வாழ்வியல்_நூல்கள்

தமிழர் இழந்துவிட்ட தொன்மம், தமிழர் வழிதொடரவேண்டிய எதார்த்த வாழ்வியல், இந்தப் பேரண்டத்தில் மனிதன் என்ற உயிரினம் பின்பற்றவேண்டிய நெறிமுறைகள் இவற்றையெல்லாம் தொடர் வழிகாட்டு வகுப்புகளாக கற்பித்துவரும் என்னுடைய அன்புத் தம்பியும், ‘செம்மை’ என்ற மரபுவழி வாழ்வியல் ஒழுங்காற்று அமைப்பின் நிறுவனருமாகிய ஆசான் ம.செந்தமிழன் அவர்களின் நூல்கள் எனது மனதிற்கு மிக நெருக்கமானவை!

மரபு சார்ந்த இயற்கை வாழ்வைப் போதிக்கின்ற அவரது புத்தகங்கள் எளிய மொழியால் எழுதப்பட்டிருக்கின்றன. மரபு வழி வேளாண்மை, உணவு, ஐம்பெரும் ஆற்றல்கள், மரபுக் கட்டுமானம், மெய்யியல், சூழலியல் என பல்வேறு பிரிவுகளில் செம்மை வெளியீட்டகத்தின் வாயிலாக ஏறத்தாழ 50க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்.

என்னுயிர் தம்பி ம.செந்தமிழனின் நூல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தமிழனும் படித்து உணர வேண்டிய அறிவுப் புதையல்கள்!

Exit mobile version