முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மக்கள் உள்ளங்களில் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் புதுவெள்ளமாய் பரவும் இந்தப் புத்தாண்டு…

0

மக்கள் உள்ளங்களில் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் புதுவெள்ளமாய் பரவும் இந்தப் புத்தாண்டு நன்னாளில், என் மீது பேரன்புகொண்டு புத்தாண்டு பரிசையும், வாழ்த்து மடலையும் அனுப்பியுள்ள இன்னிசைத் தமிழர், பெருமதிப்பிற்குரிய என்னுயிர் சகோதரர் ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கு எனது பேரன்பும், நன்றியும்!

@arrahman

எப்போதும் இசையால் அரவணைப்பீர்கள்; இன்று அன்பாலும் அரவணைத்துவிட்டீர்கள். உளம் நெகிழ்ந்தேன். தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

உங்கள் தூய உள்ளத்தையும், பேரன்பையும் போலவே உங்கள் வாழ்வும், நலமும் மேலும் சிறக்கவும், என்னுயிர் சகோதரர் இசை உலகில் இன்னும் பெரும் உயரங்களை அடைந்து தமிழுக்கும், தமிழ் மண்ணுக்கும் பெருமைகள் பல சேர்த்திட வேண்டுமென்றும் இந்நன்னாளில் பெருமகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன்.

– உங்கள் சீமான்

Exit mobile version