இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி – பரமக்குடி தொகுதி தகவல் தொழில்நுட்பப் பாசறையின் துணைச் செயலாளர் அன்புத்தங்கை ஆ.தீபிகா அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா செ.ஆறுமுகம் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
பேரன்புகொண்டு நேசித்த தந்தையை இழந்து வாடும் தங்கைக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா செ.ஆறுமுகம் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!



