முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர்…

1

நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் சேரம்பாடி சோதனைச்சாவடி (checkpost) கிளைச் செயலாளர் அன்புத்தம்பி பவுல்ராஜ் அவர்களின் தம்பியும், நாம் தமிழர் கட்சி உறுப்பினருமான அன்புத்தம்பி பாலாஜி அவர்கள் கூடலூரில் இருந்து கொளப்பள்ளி வழியாக அய்யன்கொல்லி பகுதிக்குச் சென்ற அரசுப் பேருந்தில் பயணம் செய்தபோது மழவன் சேரம்பாடி அருகே மின்கம்பத்தில் பேருந்து மோதிய விபத்தில் சிக்குண்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.

பேருந்து விபத்தில் உயரிழந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் நாகராஜ் மற்றும் தம்பி பாலாஜி அவர்களின் குடும்பத்திற்கு உரிய துயர் துடைப்பு உதவிகளை வழங்கவேண்டும் எனவும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கவேண்டும் எனவும், இவ்விபத்தில் படுகாயம் அடைந்த 20 பயணிகளுக்கும் உரிய மருத்துவச் சிகிச்சையும், துயர் துடைப்பு உதவிகளும் வழங்கவேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

@CMOTamilnadu @mkstalin

பாசமிகு தம்பியை இழந்து வாடும் தம்பி பவுல்ராஜ் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும்,நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அன்புத்தம்பி பாலாஜி அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version