நாம் தமிழர் – ஐக்கிய அமெரிக்காவின் டெலாவர் மாநிலப் பொறுப்பாளர் அன்பு சகோதரர் கஸ்பார் ராஜா அவர்களின் தந்தையார் மதிப்பிற்குரிய ஐயா இன்னாசிமுத்து அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
பேரன்புகொண்டு நேசித்த தந்தையை இழந்து வாடும் சகோதரர் கஸ்பார் ராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா இன்னாசிமுத்து அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!



