மிக்ஜாம் புயல் மற்றும் பெருவெள்ளப் பேரழிவில் பெரிதும் பாதிக்கப்பட்டு, இன்றளவும் வெள்ளம் வடியாமல் இருக்கும் பகுதிகளில் ஒன்றான திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தொகுதிக்குட்பட்ட திருநின்றவூர் முத்தமிழ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்களுக்கு இன்று 14-12-2023 நேரில் சென்று, நாம் தமிழர் கட்சி சார்பாக தற்காலிக துயர் துடைப்பு உதவியாக காய்கறிகள், அரிசி, பருப்பு, எண்ணெய், ரவை, சேமியா, கோதுமை மாவு உள்ளிட்ட சமையல் பொருட்கள் மற்றும் மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, குடிநீர் போத்தல்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சிறு தொகுப்பை வழங்கினோம்.
https://t.co/FQt04W9k9S


