சென்னை பெருவெள்ளப் பேரழிவில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பள்ளிக்கரணை (காமாட்சி நகர்) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 3500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 12-12-2023 அன்று, நாம் தமிழர் கட்சி சார்பாக தற்காலிக துயர் துடைப்பு உதவியாக காய்கறிகள், அரிசி, பருப்பு, மிளகாய் தூள், எண்ணெய், ரவை, சேமியா, கோதுமை மாவு, மசாலா தூள்கள் உள்ளிட்ட சமையல் பொருட்கள் மற்றும் மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, கொசுவர்த்தி, குடிநீர் போத்தல்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சிறு தொகுப்பை வழங்கினோம்.
https://t.co/Zz1D3igCGK






