முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

துயர் பகிர்வு: ஆவடி தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின்…

0

துயர் பகிர்வு:

ஆவடி தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் திருவேற்காடு நகரப் பொறுப்பாளர் அன்பிற்கினிய சகோதரர் டேவிட் மங்கள ராஜா அவர்கள் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.

மொழி, இனம், மண் காக்கவும், மக்களின் நலன் காக்கவும், தமிழர் உரிமைகளை மீட்கவும் காக்கவும் அயராது போராடிவரும் மாபெரும் புரட்சிகர இயக்கமான நாம் தமிழர் கட்சி எனும் அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக்கொண்டு, சிறப்பாகக் களப்பணியாற்றிவந்த சகோதரர் டேவிட் அவர்கள் மறைவு பெருந்துயரத்தைத் தருகிறது.

சகோதரர் டேவிட் அவர்களை இழந்து வாடுகின்ற அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அன்பு சகோதரர் டேவிட் மங்கள ராஜா அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version